மின்சாரம் தாக்கி சிறுமி பலி

மின்சாரம் தாக்கி சிறுமி பலியானார்

Update: 2021-04-11 16:15 GMT
கோவை

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவரது மனைவி காளியம்மாள் (38). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 

முருகன் தனது மனைவி மற்றும் கடைசி மகள் சத்யா (11) ஆகியோருடன் சூலூர் பீடம்பள்ளியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். 

சத்யா அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் முருகன் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றனர். 

சத்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டை சுத்தம் செய்தபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்