திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 11 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 11 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-11 16:09 GMT
திருப்பூர்
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  4 பேர் உள்பட 11  பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மங்கலம் ரோடு கிரிநகர் பகுதியில் 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பல்லடம்
பல்லடம் மகாலட்சுமிபுரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் வீட்டில் கணவன், மனைவி, மனைவியின் தம்பி ஆகிய 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அவர்கள் சென்றபோது, அங்கு நடைபெற்ற பரிசோதனையில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சுகாதாரத்துறையினர், நகராட்சி நிர்வாகம், ஆகியோர் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவை தடுப்புகளால் அடைத்து கிருமிநாசினி தெளித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 
குன்னத்தூர்
குன்னத்தூர் ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனோ தொற்றால் இறந்துவிட்டார். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்த போது 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது தெரியவந்தது. 
இதனால் அவருடைய வீடு குன்னத்தூர் சந்தைப்பேட்டை ஒட்டி இருப்பதாலும், ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் இருப்பதாலும் அந்த வீதியையும், சந்தை பேட்டையில் 100 மீட்டர் வரையிலும் தட்டி வைத்து மறைத்து குன்னத்தூர் சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினரும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். இதில் குன்னத்தூர் வருவாய்ஆய்வாளர் லோகநாதன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்