காங்கேயம்பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

காங்கேயம்பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

Update: 2021-04-11 16:00 GMT
காங்கேயம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காங்கேயம் பஸ் நிலையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காங்கேயம் நகராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.இத்னை தொடர்ந்து காங்கேயம் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், கடை வீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து ஆய்வு செய்யப்பட்டது. 
மேலும் பஸ் நிலையக் கடைகள், தினசரி மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க, முக கவசம் அணிய வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் நின்று செல்லும் பஸ்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்