வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் பணிபுரியும் வயதான தம்பதி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
கர்நாடகா,
மத்திய அரசு கிராமப்புறங்களை வளர்ச்சி அடையும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இளைஞர்கள் வேலை செய்ய முன்வருவதில்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் ரோனா தாலுகா அபிகேரி கிராமத்தில் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த ஒரு வயதான தம்பதி ஈடுபட்டு வருகிறார்கள். அபிகேரியை சேர்ந்த காந்தய்யா மாதபதி (வயது 69), அவரது மனைவி பரவ்வ காந்தய்யா (65) ஆகியோர் தான் அந்த தம்பதி. இவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாக வயதான காலத்திலும் பணியாற்றி வருகிறார்கள். இந்த தம்பதியினர் சக தொழிலாளர்களுக்கு போட்டியாக மண்வெட்டி பிடித்து பள்ளம் தோண்டுதல், மணல் அள்ளி கொட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உழைப்பாளிக்கு வயது தடை இல்லை என்பதற்கு இந்த தம்பதி ஒரு நல்ல உதாரணம். அந்த தம்பதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.