தட்டார்மடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தட்டார்மடம் அருகே, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.;
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே தெற்கு உடைபிறப்பு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் கோவிலில் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிச் சென்றனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கோவிலின் முன்பிருந்த இரும்பு உண்டியலை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
நேற்று காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.