அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவி, ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா

அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 மாணவி, ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா.

Update: 2021-04-11 12:13 GMT
பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அடுத்த மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 56 மாணவர்கள், 48 மாணவிகள் என மொத்தம் 104 பேர் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பிளஸ்-2 மாணவி, ஆசிரியை மற்றும் அலுவலக பெண் ஊழியர் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில் ஆசிரியை மற்றும் மாணவி இருவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அலுவலக பெண் ஊழியர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்