கயத்தாறு பகுதியில் 3 பேருக்கு கொரோனா

கயத்தாறு பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-11 12:02 GMT
கயத்தாறு:
கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் பரிேசாதனை செய்யப்பட்டது. இதில் கயத்தாறை சேர்ந்த 2 பேருக்கும், பன்னீர்குளத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த 3 பேரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அந்த 3 பேரும் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்