கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை

கோவையில் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-11 02:46 GMT
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை
கோவை,

கோவை பூசாரிபாளையம் ரோடு முத்தண்ணன் குளத்தில் நேற்று முன்தினம் காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. 

இது குறித்து ஆர்.எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் பிணமாக கிடந்தவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி லோகநாதன் (வயது 45) என்பதும், அவர், மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.‌ 

கழுத்து அறுபட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. 

அவர் மது குடிப்பதற்காக முத்தண்ணன் குளக்கரைக்கு வந்த போது ஏற்பட்ட தகராறில் யாராவது கொலை செய்து உடலை குளத்தில் வீசி விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ 

ஆனால் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்பது தெரிய வில்லை. எனவே கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்