சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு எள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு போனது.

Update: 2021-04-10 23:12 GMT
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு எள் ஏலம் போனது. 
எள் ஏலம்
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,008 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.சதீஷ்குமார் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. 
இதில் கருப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 112 ரூபாய் 72 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. 
ரூ.73½ லட்சம்
சிவப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 83 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 90 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளை எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 60 காசுக்கும் விற்கப்பட்டது. 
எள் மொத்தம் ரூ.73 லட்சத்து 47 ஆயிரத்து 332-க்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்