பெருந்துறை வாரச்சந்தையில் வெளியூர் வியாபாரிகள் வராததால் தேங்காய் விலை குறைந்தது
பெருந்துறை வாரச்சந்தையில் வெளியூர் வியாபாரிகள் வராததால் தேங்காய் விலை குறைந்து விற்பனை ஆனது.
பெருந்துறை
பெருந்துறை வாரச்சந்தையில் நேற்று தேங்காய் நேரடி விற்பனை நடைபெற்றது. கடந்த வாரம் 10 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
வரத்து அதிகம் என்றாலும், தேங்காய்களை வாங்குவதற்கு வெளியூர் வியாபாரிகள் யாரும் வரவில்லை.
இதனால் சராசரியாக 18 ரூபாய்க்கு விற்கும் முதல் தரம் தேங்காய் ஒன்று நேற்று 3 ரூபாய் குறைந்து 15 ரூபாய்க்கு விற்றது.
இதில் முதல் தரம் தேங்காய் ஒன்று ரூ.14 முதல் ரூ.15 வரையிலும், 2-ம் தரம் ரூ.13 முதல் ரூ.14 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனையானது.