கருப்பூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கருப்பூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.;

Update: 2021-04-10 22:46 GMT
கருப்பூர்:
கருப்பூர் பேரூராட்சி 2-வது வார்டு பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி  பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் சின்ன அம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் முடிவடைந்தது. அங்கு அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். மேலும் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்