அன்னவாசல்
அன்னவாசல் போலீசார் நேற்று குடுமியான்மலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணலுடன் வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்று விட்டது. இருப்பினும் போலீசார் பின்னால் துரத்தி சென்றனர். இதனால் பயந்துபோன லாரி டிரைவர் லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதையடுத்து மணலுடன் இருந்த அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.