12 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு-கலெக்டர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-10 20:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது  என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

38 ஆயிரம் பேருக்கு...

இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 38 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 18 ஆயிரம் பேர் பொதுமக்கள். மீதியுள்ள 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள்.
 தற்போது 12 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் 10 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரிப்பு

பொதுமக்களிடம் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும் அரசின் உத்தரவின்படி தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சிவகங்கை அடுத்த அரசுமொழியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல தாயமங்கலம் அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அங்கேயே சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் முதல் முறை எந்த வகை ஊசி போடப்பட்டது.அதைத்தான் இரண்டாம் முறையும் போட வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்