தீயணைப்ப நிலையத்தில் தீ தடுப்பு பயிற்சி

கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2021-04-10 20:27 GMT
கடையநல்லூர், ஏப்:
கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மீட்பு பணிகள் தன்னார்வ தொண்டர்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு, விபத்து மற்றும் வெள்ள காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஒருநாள் சிறப்பு பயிற்சி செயல்முறை விளக்கங்களுடன் அளிக்கப்பட்டது. கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை போக்குவரத்து பிரிவு நிலைய அலுவலர் சண்முகசுந்தரம், பணியாளர்கள் மாரிகுமார், ராமகிருஷ்ணன், மகேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்