தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை
தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை நடந்தது.
பாவூர்சத்திரம், ஏப்:
தென்காசி- கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையில் விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி நடந்த பூஜையை முன்னிட்டு அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள சுவாமிகளுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.