தியேட்டர், ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் அனுமதி

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், திண்டுக்கல்லில் உள்ள தியேட்டர், ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.;

Update: 2021-04-10 20:03 GMT
திண்டுக்கல்: 

புதிய கட்டுப்பாடுகள் 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதில் ஓட்டல்கள், கடைகள், சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 

பஸ்களில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 

சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் அந்த புதிய கட்டுப்பாடு அனைத்தும் நேற்று நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து நேற்று திண்டுக்கல்லில் சினிமா தியேட்டர்களில் முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும் அனைவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதோடு 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டது. 

மேலும் தியேட்டருக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு இருக்கை இடைவெளிவிட்டு ரசிகர்கள் அமர வைக்கப்பட்டனர்.

பஸ்கள்-ஓட்டல்கள்
அதேபோல் பஸ்களில் முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே ஏற்றப்பட்டனர். மேலும் பயணிகள் நின்று கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர வைக்கப்பட்டனர். அதேபோல் டீக்கடைகள், ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகள் வைக்கப்பட்டன. 

இதற்கிடையே தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

கொரோனா கடடுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, சீல் வைக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் செய்திகள்