பெண் ஊழியருக்கு கொரோனா

செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-10 19:54 GMT
கல்லல்,

கல்லல் ஒன்றியத்தில் செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு கல்லல், செம்பனூர்,கூமாச்சிப்பட்டி,நெற்புகபட்டி, அரண்மனை சிறுவயல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்தில் டாக்டர்கள், நர்சுகள், டெக்னீஷியன்கள், அலுவலக ஊழியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொேரானா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கடுமையாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்