கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; மளிகை கடை உரிமையாளர் பலி

பாளையங்கோட்டையில் கார், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் மளிகை கடை உரிமையாளர் இறந்தார்.

Update: 2021-04-10 19:30 GMT
நெல்லை, ஏப்:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் விஸ்வரத்தினா நகரைச் சேர்ந்தவர் பாபு கிஷோர் (வயது 53). இவர் பாளையங்கோட்டையில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மாலதி (46), மகன் குரு விசாகன் (13) ஆகியோருடன் கே.டி.சி. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாபு கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த மாலதி, குருவிசாகன் ஆகிய 2 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்