மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு

மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-04-10 19:25 GMT
வடகாடு
வடகாடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குறும்பிவயல் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வரப்பட்டது தரிய வந்தது. அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த கருக்காகுறிச்சி கீழத்தெரு பகுதியை சேர்ந்த தினேஷ், ரமேஷ், நாகராஜன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்