கொரோனா தடுப்பூசி முகாம்

காரியாப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-04-10 19:17 GMT
காரியாபட்டி, 
தமிழகம் முழுவதும் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவக்குமார் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பொதுமக்கள் எந்த பயமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்