100 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 100 மாணவ-மாணவிகளுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் பட்டம் வழங்கினர்.
சிவகங்கை,
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 100 மாணவ-மாணவிகளுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் பட்டம் வழங்கினர்.
பட்டமளிப்பு விழா
சிவகங்கை மருத்துவக்கல்லூரி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை இங்கு ஐந்து ஆண்டுகள் படிப்பு முடித்து பயிற்சி டாக்டராக பணிபுரிந்து 300 பேர் சென்றுள்ளனர். தற்போது 4-வது பேட்ஜாக கடந்த 2015-ம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 51 ஆண்கள், 49 பெண்கள் பட்டம் பெற்று உள்ளனர்.
மருத்துவக்கல்லூரியில் படித்தவர்களில் சீனா உடன் நடந்த யுத்தம் மற்றும் இந்தோ பாகிஸ்தான் சண்டைகளின் போது காயமடைந்தவர்களுக்கு உதவிட மருத்துவக்கல்லூரியில் படித்தவர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர்.ஆனால் இதை அனைத்தையும் விட இந்த மாணவ-மாணவிகளுக்கு வரலாற்றில் என்றுமே இடமுண்டு. ஏனென்றால் உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்கியவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்ததில் இவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது.
வரலாற்றில் என்றுமே இவர்களின் பங்கு மறக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
100 பேருக்கு...
விழாவில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஷர்மிளா திலகவதி, டாக்டர் பீர்முகமது, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், உதவி மருத்துவ அலுவலர் முகமது ரபி உள்பட பலர் கலந்து கொண்டனர