8-ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூனில் உள்ள ராணுவ பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ பள்ளியில் ஜனவரி-2022-ல் 8-ம் வகுப்பில் சேர்வதற்கு வருகிற ஜூன் மாதம் 5-ம் தேதியில் நுழைவுத்தோ்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1.1.2022 அன்று 11½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். (1.1.2009-க்கும் முன்னதாகவும் 1.7.2010-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது) மேலும், விவரங்களுக்கு ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி இணையதளம் www.rimc.gov.in வாயிலாக விவரம் அறிந்துகொள்ளலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.