பிறவி மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ேதரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Update: 2021-04-10 18:29 GMT
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ேதரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். 
பிறவி மருந்தீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது.  ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாகவும் விளங்குகிறது. 
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்  பிடிப்பது வழக்கம். 
ரத்து
கடந்த ஆண்டு கொேரானா பரவல் காரணமாக இக்கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டும் கொேரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில்  திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
மேலும் வருகிற 23-ந் தேதி(வெள்ளி்க்கிழமை) நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு மீண்டும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது. 
இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பக்தர்களின் உடல வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு  கிருமி நாசினி தெளித்தும் பக்தர்களை கோவில் ஊழியர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர்.

மேலும் செய்திகள்