மக்கள் நீதிமன்றம் மூலம் 114 வழக்குகள் தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் 114 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட முன்மை சார்பு நீதிபதி சுந்தர் அய்யா தலைமை தாங்கினார். கரூர், குளித்தலை என மொத்தம் 4 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 114 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ரூ.4 கோடியே 75 லட்சத்து 06 ஆயிரத்து 895 இழப்பீடு வழங்கப்பட்டன.