புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை டீக்கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில், கரூர் டவுன் போலீசார் ராமகிருஷ்ணாபுரம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 கடைகளில் விற்கப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.