வால்பாறையில் மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு

வால்பாறையில் மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;

Update: 2021-04-10 17:37 GMT
வால்பாறை,

வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இதற்கு நீதிபதி கவிதா தலைமை தாங்கினார். மொத்தம் 60 வழக்குகளில் தொடர்புடையவர்கள் பங்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

இதில் 58 வழக்குகளில் தொடர்புடையவர்கள் விசாரணையில் கலந்து கொண்டனர். முடிவில் 12 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது. இதில் காசோலை வழக்குகள் மூலமாக ரூ.2 லட்சமும், ஜீவனாம்சம் வழக்கு மூலமாக ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500,  மோட்டார் வாகன வழக்கு மூலமாக ரூ.20 ஆயிரம், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கு மூலமாக ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 656 என ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்தி 156 வசூலிக்கப்பட்டது.  

வழக்கு விசாரணையில் வக்கீல்கள் முத்துசாமி, முருகன், விஸ்வநாதன், பால்பாண்டி, பெருமாள், சிவசுப்பிரமணியன், சுமதி, அன்புநாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்