திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 2 ஆயிரத்து 92 வழக்குகளுக்கு ரூ.51 கோடியே 18 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 2 ஆயிரத்து 92 வழக்குகளுக்கு ரூ.51 கோடியே 18 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2021-04-10 16:53 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் 2 ஆயிரத்து 92 வழக்குகளுக்கு ரூ.51 கோடியே 18 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் சார்பாக 4 அமர்வுகளுடன் மக்கள் நீதி மன்றம் நேற்று காலை திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அல்லி தொடங்கி வைத்தார்.
இதில் நீதிபதிகள் கோவிந்தராஜன், நாகராஜன், ஜெயந்தி, அனுராதா, பிரிஷ்ணவ், ஸ்ரீவித்யா, கவியரசன், நித்யகலா, ராமநாதன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுபோல் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய தாலுகாவில் உள்ள கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
2,092 வழக்குகளுக்கு தீர்வு
மாவட்டம் முழுவதும் 19 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், சொத்து தகராறு வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மொத்தம் 5 ஆயிரத்து 929 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 92 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. ரூ.51 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 911 வழக்குகளுக்கு ரூ.33 கோடியே 16 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. இதில் வழக்கு தொடர்புடையவர்கள், வக்கீல்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், இன்சூரன்சு நிறுவனத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்