உடுமலையில், கோடை வெயிலில் தண்ணீர் தாகத்தை தணிக்க, மண்பானைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

உடுமலையில், கோடை வெயிலில் தண்ணீர் தாகத்தை தணிக்க, மண்பானைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-04-10 16:46 GMT
உடுமலை
உடுமலையில், கோடை வெயிலில் தண்ணீர் தாகத்தை தணிக்க, மண்பானைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோடை வெயில்
உடுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் தாகத்திற்கு குளிர்ந்த தண்ணீரை விரும்புகின்றனர். மண்பானைகளில் ஊற்றி வைக்கும் தண்ணீர் அதன் தன்மை மாறாமல் குளிர்ச்சியாக இருக்கும்.
முன்பு வீடுகளில் மண்பானைகளை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். நாகரிகம் வளர்ந்த நிலையில் மண்பானைகளின் பயன்பாடு குறைந்து எவர்சில்வர் குடங்களின் பயன்பாடு அதிகரித்தது.
மண் பானைகள்
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் மீண்டும் மண்பானைகளை பயன்படுத்தி வருகின்றனர். சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க மண்பானைகளை வாங்கிச்சென்று அதில் தண்ணீர் ஊற்றி வைத்து, தாகத்தின் போது பருகுகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதைத்தொடர்ந்து உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே பழனிசாலை, ராஜேந்திரா சாலை ஆகிய இடங்களில் மண்பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. 
அங்கு 4 லிட்டர் முதல் 12 லிட்டர் வரை தண்ணீர் பிடிக்கும் வகையில் பல்வேறு அளவுகளில் மண்பானைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்பானையின் மூடியைத்திறந்து அதன் வழியாக டம்ளரில் தண்ணீர் எடுத்து பருகலாம். மண்பானையின் பக்கவாட்டில் கீழ்பகுதியில் குழாய் அமைத்த பானைகளும் விற்பனைக்கு உள்ளன. இந்த குழாயை திருகி டம்ளர் அல்லது பாட்டிலில் தண்ணீரை பிடித்து பருகலாம். இப்போது இந்த மண்பானைகள் விற்பனை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்