வக்கீலை தாக்கிய முதியவர் கைது

வக்கீலை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-04-10 16:39 GMT
கமுதி, 
கமுதி அருகே பேரையூர் போலீஸ் சரகம் பாக்குவெட்டியைச் சேர்ந்தவர் ராமு (வயது62). இவரது மகளை திருமணம் செய்து உள்ள ராஜீவ் காந்திக்கும் ராமுவிற்கு தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பேரையூர் போலீசில் புகார் செய்ய வக்கீல் குலசேகர பாண்டியனை ராஜீவ்காந்தி அழைத்துச்சென்று இருந்தாராம். இதனால் ராமு இவரது மகன் காளி கண்ணன் ஆகியோர் ஆத்திரமடைந்து வக்கீலை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்களாம். காயமடைந்த வக்கீல் பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்