வரத்து குறைவு காரணமாக உடன்குடியில் மீன்கள் விலை உயர்வு

வரத்து குறைந்ததால் உடன்குடியில் மீன்கள் விலை உயர்ந்து உள்ளது.

Update: 2021-04-10 12:55 GMT
உடன்குடி:
வரத்து குறைந்ததால் உடன்குடியில் மீன்கள் விலை உயர்ந்து உள்ளது.

மணப்பாடு மீன்கள்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட 17 கிராம பஞ்சாயத்து, ஒரு நகர பஞ்சாயத்து அடங்கிய பகுதியில் உள்ள பல்லாயிரகணக்கான மக்கள் மீன்கள் வாங்குவதற்கு உடன்குடி பகுதிக்கு தான் வருகிறார்கள்.

உடன்குடி தினசரி மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகள் மற்றும் நடுக்கடை பஜாரில் உள்ள மீன் கடைகளுக்கு மணப்பாடு மீன்கள் அதிகமாக வரும். மேலும் ஆலந்தலை, பெரியதாழை, கூடுதாழை, பகுதியில் உள்ள மீன்களும் விற்பனைக்கு வரும். தற்போது உடன்குடி அருகில் உள்ள மணப்பாடு கடலில் மீன்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. 

விலை உயர்வு

இதனால் வெளியூரில் உள்ள மீன்கள் உடன்குடிக்கு அதிகமாக வந்துள்ளன. இருந்தாலும் மீன்கள் விலை கிடுகிடு என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. சாளை மீன்கள் சிறியது ரூ.10-க்கு 4-ம், பெரியது ரூ.10-க்கு 2-ம், சீலா மீன் ஒரு கிலோ ரூ.700-க்கும், பாரை மீன் ரூ.400-க்கும், விளா மீன் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற மீன்களம் விலை உயர்ந்து காணப்பட்டது. 

வருகிற 15-ந் தேதி மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் மீன்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்