விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விடுதலை சிறுத்கைள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-04-10 12:43 GMT
கோவில்பட்டி:

அரக்கோணத்தில் தேர்தல் தகராறில் தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜூன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், கோவில்பட்டியில்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார்.  மாநில வழக்கறிஞர் அணி துணை பொது செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, நகர செயலாளர் கருப்பசாமி, செய்தி தொடர்பாளர் மனுவேல், 

இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல் சேகர், நகர துணை செயலாளர் பாண்டி வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்