ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க குவிந்த பக்தர்கள்; கொரோனா விதிமுறை மீறலால் தொற்று பரவும் அபாயம்
ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க குவிந்த பக்தர்கள் விதிமுறை மீறலால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீர்த்தம் எடுக்க வந்தனர்
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க குவிந்த பக்தர்கள் கொரோனா விதிமுறை மீறலால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீர்த்தம் எடுக்க வந்தனர்
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே தொட்டம்பட்டியில் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி தொட்டம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் தீர்த்தம் எடுப்பதற்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று ஊஞ்சலூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள காவிரி ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வழிபட்டனர்.
கொரோனா பரவும் அபாயம்
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பக்தர்கள் கழற்றி வீசும் துணிகள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்றவைகள் அசுத்தமான நிலையில் கிடக்கின்றன. எனவே சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ள ஊஞ்சலூர் காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக இந்த ஆண்டு வந்தோம்’ என்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு கோவில்களில் திருவிழா நடத்த தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ெகாரோனா விதிமுறைகளை மீறி தீர்த்தம் எடுக்க ஊஞ்சலூர் காவிரி ஆற்றில் குவிந்த பக்தர்களால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் முக கவசமும் அணியவில்லை. ஏற்கனவே நேற்று முன்தினம் கொரோனாவுக்கு கொடுமுடி பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியை ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.