சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.10½ லட்சம் வருவாய்

சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.10½ லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.;

Update: 2021-04-09 22:50 GMT
சேலம்:
சேலம் ராஜகணபதி கோவிலில் 4 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணுவதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நேற்று கோவிலில் இருந்த 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் சுகவனேசுவரர் கோவில் வளாகத்தில் வைத்து எண்ணப்பட்டன. அதில் பக்தர்களின் காணிக்கை மூலம் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 176 ரொக்கம், 8 கிராம் 100 மில்லி தங்கம், 240 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்தது. அதேபோல், 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் 2 உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. அதில், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 970 ரொக்கம் மற்றும் 5 கிராம் 100 மில்லி தங்கம், 45 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, ஆய்வர் மணிமாலா, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்