ஆத்தூரில் முககவசம் அணியாத 6 பேருக்கு அபராதம்
ஆத்தூரில் முககவசம் அணியாத 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆத்தூர்:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் ஆத்தூர் கடைவீதி, ராணிப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கொரோனா பரவாமல் தடுக்க அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் வந்த 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1200 அபராதம் விதித்தனர்.