உலா வரும் காட்டுயானை
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டுயானை ஒன்று உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன.
இவற்றில் காட்டுயானை ஒன்று கடந்த சில நாட்களாக பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உலா வருகிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டுயானை புகுந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீரை தேடி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வலம் வருவதாகவும், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி வருகிறோம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.