திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை

சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை. ஆண்களை விட பெண்கள் 20 ஆயிரம் பேர் அதிகமாக வாக்களித்தனர்.

Update: 2021-04-09 21:35 GMT
திண்டுக்கல்: 

20 ஆயிரம் பெண்கள் அதிகம் 
 தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் 9 லட்சத்து 14 ஆயிரத்து 386 ஆண்கள், 9 லட்சத்து 62 ஆயிரத்து 488 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 203 பேர் என மொத்தம் 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் இருக்கின்றனர். 

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 13 ஆண்கள், 7 லட்சத்து 30 ஆயிரத்து 379 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 14 பேர் என மொத்தம் 14 லட்சத்து 40 ஆயிரத்து 406 பேர் வாக்களித்தனர். 

இதில் ஆண்களை விட 20 ஆயிரத்து 366 பெண்கள் அதிகம் ஆகும். 4 லட்சத்து 33 ஆயிரத்து 671 பேர் வாக்களிக்கவில்லை. மொத்த வாக்குப்பதிவு 76.83 சதவீதம் ஆகும்.

தொகுதி வாரியாக... 
பழனி தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 592 ஆண்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 587 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 214 பேர் உள்ளனர். 

அதில் 1 லட்சத்து 1,954 ஆண்கள், 1 லட்சத்து 1,327 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 2 பேர் என மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 283 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 73.33 சதவீதம் ஆகும்.

ஒட்டன்சத்திரம்-ஆத்தூர் 
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 261 ஆண்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 924 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 31 பேர் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 216 பேர் உள்ளனர். 

அதில் 98 ஆயிரத்து 2 ஆண்கள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 405 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 408 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 83.08 சதவீதம் ஆகும்.

ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 273 ஆண்கள், 1 லட்சத்து 51 ஆயிரத்து 143 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 26 பேர் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 442 பேர் உள்ளனர். 

ஆனால் 1 லட்சத்து 10 ஆயிரத்து 819 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 389 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் ஒருவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 209 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 77.96 சதவீதம் ஆகும்.

நிலக்கோட்டை-நத்தம் 
நிலக்கோட்டை தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 723 ஆண்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 312 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 9 பேர் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 44 பேர் உள்ளனர். 

அதில் 90 ஆயிரத்து 865 ஆண்கள், 92 ஆயிரத்து 338 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 203 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 75.07 சதவீதம் ஆகும்.

நத்தம் தொகுதியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 251 ஆண்கள், 1 லட்சத்து 44 ஆயிரத்து 969 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 47 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 267 பேர் உள்ளனர். 

அதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 845 ஆண்கள், 1 லட்சத்து 13 ஆயிரத்து 800 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 3 பேர் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 648 பேர் வாக்களித்தனர். 

வாக்குப்பதிவு 78.95 சதவீதம் ஆகும்.

திண்டுக்கல்-வேடசந்தூர் 
திண்டுக்கல் தொகுதியில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 471 ஆண்கள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 57 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 55 பேர் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 பேர் உள்ளனர். 

அதில் 94 ஆயிரத்து 837 ஆண்கள், 96 ஆயிரத்து 746 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 7 பேர் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 590 பேர் வாக்களித்தனர். 

வாக்குப்பதிவு 69.27 சதவீதம் ஆகும்.

வேடசந்தூர் தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 815 ஆண்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 496 பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 311 பேர் உள்ளனர். 

அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 691 ஆண்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 374 பெண்கள் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 65 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 80.16 சதவீதம் ஆகும்.

மேலும் செய்திகள்