திராவகம் குடித்த பெண் சாவு

சிவகிரி அருகே திராவகம் குடித்த பெண் இறந்தார்.

Update: 2021-04-09 20:01 GMT
சிவகிரி, ஏப்:
சிவகிரி வடக்கு ரத வீதி முதல் சந்து பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 65). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ராமலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்று ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்