மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை
மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது;
மதுரை
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த இளம்பெண் தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து, அந்த பெண்ணின் தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார். முடிவில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பெண்ணின் தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா தீர்ப்பளித்தார்.