நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் ஒரே நாளில் 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லை, ஏப்:
நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் கல்லத்தியான் மகன் செந்தூர் என்ற கடல் மணி (வயது 22). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன் (44), கனகராஜ் (31) மற்றும் கல்லத்தி முருகன் (26).
இவர்கள் 4️ பேரும் சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். அதை ஏற்று கடல் மணி உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.
நெல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் ஒரே நாளில் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.