பேரையூரில் மதுபாட்டில்கள் பறிமுதல்
பேரையூரில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
பேரையூர்,
சாப்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வண்டாரி ராமசாமிபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விற்பனை செய்வதற்காக 22 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை கைது செய்தனர். இதேபோல் குச்சம் பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மது பாட்டில்கள் வைத்து இருந்தபோது வில்லூர் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.