2 பேருக்கு ஒரு வருட சிறை தண்டனை

தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பேருக்கு ஒரு வருட ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2021-04-09 19:03 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள ராமசாமிநகரை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (வயது 39). கொங்கலாபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன் (23). இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது சிவகாசி டவுன் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு சிவகாசி டவுன் போலீசார் ஜான்பீட்டர், முருகன் ஆகிய இருவரையும் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் முன் ஆஜர்படுத்தி இருவரும் இனி குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என எழுதி கொடுத்தனர். இந்தநிலையில் உறுதி பத்திரம் எழுதி கொடுத்து ஒரு வருடம் முடிவதற்குள் இருவரும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப் பட்டனர். இதைதொடர்ந்து அவர்கள் இருவரையும் ஒரு வருடம் சிறையில் அடைக்க சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ் குமார் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ஜான்பீட்டர், முருகன் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்