நெல்லை, ஏப்:
பாளையங்கோட்டை அருகே கீழப்பாட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகள் கொம்பம்மாள் (வயது 35). உடல் ஊனமுற்றவர். மேலும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.