பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-09 18:22 GMT
சாத்தூர்.
சாத்தூர் அருகே கோசுகுண்டு கிராமத்தை சேர்ந்த அழகப்பன் மகள் பாண்டிமுருகேஸ்வரி (வயது 21). இவரது குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் கருப்பசாமி (34) என்பவருக்கும், ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று கோசுகுண்டு பஸ் ஸ்டாப் அருகில் பாண்டிமுருகேஸ்வரி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது. அந்த வழியாக வந்த கருப்பசாமி தகாத வார்த்தையால் திட்டி, அடித்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசாரிடம் பாண்டிமுருகேஸ்வரி புகார் அளித்துள்ளார். அதன்படி இருக்கன்குடி போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்