காவேரிப்பட்டணத்தில் முதியவரை தாக்கியவர் கைது
காவேரிப்பட்டணத்தில் முதியவரை தாக்கியவர் போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் சந்தாபுரத்தைச் சேர்ந்தவர் சுதாராம் (வயது 60). விவசாயி. சம்பவத்தன்று இவர் பனகல் தெரு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது வெற்றிக்காரன் தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (22) மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுதாராம் கேட்டார்.
இதில் பிரவீன்குமார் ஆத்திரம் அடைந்து சுதாராமை தாக்கினார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரவீன்குமாரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.