கெலமங்கலம் அருகே நீச்சல் பழகிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி
கெலமங்கலம் அருகே நீச்சல் பழகிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த ஓசூர் தாலுகா முகலூர் பக்கமுள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 19). இவர் ஓசூர் தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இவர் அனுமந்தபுரத்தில் தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகினார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து அவரது தந்தை சங்கராச்சாரி கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.