சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-09 18:12 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ரத்னவிலாஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சங்கரேஸ்வரன் (வயது 51), ஆனந்த் (52), பாலமுருகன் (30), காளிராஜன் (43), தங்கம் (67) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2,350 பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்