புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் 65 வயது மூதாட்டி, வெங்கமேட்டை சேர்ந்த 66 வயது மூதாட்டி, வடிவேல்நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, செங்குந்தபுரத்தை சேர்ந்த 48 வயது பெண், வெள்ளியணையை சேர்ந்த 25 வயது வாலிபர், திருக்காம்புலியூரை சேர்ந்த 30 வயது வாலிபர், காந்திகிராமத்தை சேர்ந்த 46 வயது ஆண், பரமத்தியை சேர்ந்த 54 வயது ஆண் உள்பட 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.