ஓசூருக்கு 3-வது நாளாக கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை பயணிகள் அவதி
கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை;
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்லும் 200-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதே போல், தினமும் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு வந்து செல்லும் 50-க்கும் மேற்பட்ட கர்நாடக பஸ்களும் 3-வது நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பயணிகள், பெங்களுருவில் பணிசெய்வோர், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் அவதி அடைந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு பஸ்களும், தனியார் பஸ்களும், ஓசூர்-பெங்களுரு இடையே தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.