வாய்க்காலில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
வாய்க்காலில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
உடுமலை
உடுமலையை அடுத்து பாலப்பம்பட்டி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ஹேமலதா. இவருக்கு சொந்தமான பசுமாடு அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது பி.ஏ.பி.கிளை வாய்க்காலில் தவறி விழுந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.