கொரோனாவுக்கு முதியவர் பலி

கொரோனாவுக்கு முதியவர் பலியானார். ஒரே நாளில் 28 பேர் கொரோனா தொற்்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-04-09 17:13 GMT
ராமநாதபுரம், 
கொரோனாவுக்கு முதியவர் பலியானார். ஒரே நாளில் 28 பேர் கொரோனா தொற்்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை கடந்த பல மாதங்களாக ஒற்றை எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது இரட்டை இலக்க பாதிப்பாக மாறியதுடன் 28 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 693 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 140 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அறிகுறி
இந்நிலையில் ராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி அவருக்கு பரிசோதணை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதைத்தொடரந்து நேற்று பிற்பகலில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் ½ மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா தொற்றுக்கு யாரும் பலியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதோடு ராமேசுவரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பலியாகி இருப்பது மாவட்ட மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அவர் வசித்த பகுதியில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்